காந்தியின் 153ஆவது பிறந்தநாள் - பிரதமர் மோடி - சோனியாகாந்தி மலர் தூவி மரியாதை!
தேசப்பிதா, மகாத்மா என்று போற்றக்கூடிய காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியான இன்று காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்று. இன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகின்றது.
காந்தி ஜெயந்தியான இன்று புது டெல்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நாளில் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
