படத்தில் நாயகனாக களமிறங்கும் கானா வினோத்
பிக்பாஸ் சீசன் 9 ரசிகர்களின் நாயகனாக வலம் வந்த கானா வினோத், படத்தில் நாயகனாக களமிறங்கவுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9ல் மக்கள் மனம் கவர்ந்தவர் என்றால் கானா வினோத் தான்.
பின்னணி பாடல்களை பாடியிருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபல்யமானார்.

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கானா வினோத் வெளியேறுவதாக முடிவெடுக்க, பலரும் டைட்டில் வின்னரே நீங்க தான் என ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக சந்தோஷமான தகவலை தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படத்தில் பாடல்களை எழுதவுள்ளாராம். கவின்- சாண்டி மாஸ்டர் இணையும் படத்தில் பணிபுரியவும் வாய்ப்பு கிடைத்துள்ளாம்.

அத்துடன் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, கடவுள் ஆசிர்வாதத்தாலும் மக்கள் ஆதரவாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருவதால், அதனை தக்கவைத்துக்கொள்ள முழுமையாக உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.
