கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு விரைவில் ஒப்புதல் - பொதுமக்கள் மகிழ்ச்சி
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு ஒரு சில நாட்களில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமைந்துள்ளது. இதனை செலுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்தாலும் அச்சம் காரணமாக பொதுமக்களில் சிலர் இன்னும் செலுத்திக் கொள்ள மறுக்கின்றனர்.
இதனிடையே Merck எனும் நிறுவனம் தயாரித்துள்ள Molnupiravir எனும் இந்த மாத்திரையை , 18 வயதுக்கு மேற்பட்டு லேசானது முதல் மிதமான தொற்று பாதிப்பு கொண்டவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இந்த மாத்திரைக்கு ஒரு சில நாட்களில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் இந்த மாத்திரையின் விலை ரூ.2000 முதல் 3000 ஆகவோ அல்லது ரூ.4000ஆகவோ இருக்கும். பின்னர், சந்தைக்கு வரும் போது இதன் விலை 500 முதல் 600 ரூபாய் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பைசர் நிறுவனத்தின் Paxlovid மாத்திரை தொற்றின் தீவிரதன்மையை குறைப்பதில் சிறப்பாக செயல்படுவதாகவும், விரைவில் இதற்கும் ஒப்புதல் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாத்திரைகளும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதில் தடுப்பூசியை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.