போட்டுடைத்த கம்பீர்..கடத்தப்பட்ட கபில் தேவ்..வைரலாகி வரும் வீடியோவால் பதற்றம்

Kapil Dev India Indian Cricket Team Gautam Gambhir
By Karthick Sep 26, 2023 10:17 AM GMT
Report

பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ், கடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

கபில் தேவ்

இந்திய அணியை முதல் உலககோப்பைக்கு வழிநடத்தி சென்ற கேப்டன் கபில் தேவ் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் மதிப்பையும் இன்றளவும் பெரும் கவுரவத்தையும் பெற்று முக்கிய பிரபலமாக இருந்து வருகின்றார்.

gambir-video-of-kapil-dev-getting-kidnapped

கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வூ பெற்றுள்ள அவர், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக தனது பணியை தொடர்ந்து வருகின்றார். இந்நிலையில், அவர் கடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

கடத்தப்பட்டாரா?

அந்த வீடியோவில் கபில் தேவின் வாய் மற்றும் கை ஆகியவை கட்டப்பட்டு, அவரை இரண்டு மூன்று பேர் சேர்ந்து இழுத்து செல்வது போல வீடியோ இடம்பெற்றுள்ளது. இதனை பகிர்ந்துள்ள கம்பீர், இது வெறும் பிரமோஷன் வீடியோவா? அல்லது உண்மையானதா? என்று கேள்வி எழுப்ப பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

gambir-video-of-kapil-dev-getting-kidnapped

ஆனால், உடனே இது குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் வரும் உலகக்கோப்பையை முன்னிட்டு, எடுக்கப்பட்ட வீடியோவே இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வீடியோ வைரலாக நிலையில், பலரும் அதிர்ச்சியில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.