கெட்ட வார்த்தையில் கண்டபடி கத்திய கம்பீர்..வைரலாகும் வீடியோ
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் ஆக்ரோஷமாக கத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
15வது ஐபிஎல் சீசனில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 45வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
— Addicric (@addicric) May 1, 2022
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக ராகுல் 77 ரன்களும், தீபக் ஹூடா 52 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற தவறியது. இப்போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆக்ரோஷமாக கத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கெட்ட வார்த்தைகளையும் கலந்து அதனை கொண்டாடியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மேட்ச்-ல ஜெயிக்கணும்ன்னு வெறி இருக்கலாம். அதுக்குன்னு இப்படியா கத்து்றது என கேள்வியெழுப்பியுள்ளனர்.