உலகக் கோப்பையில் இந்த அணிதான் சவாலாக இருக்கும் : கம்பீர் கருத்து

Gautam Gambhir
By Irumporai Oct 16, 2022 09:01 AM GMT
Report

இந்த உலகக்கோப்பையில் இலங்கை அணி மிகவும் பலமான அணியாக உள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

 கவுதம் கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

உலகக் கோப்பையில் இந்த அணிதான் சவாலாக இருக்கும் : கம்பீர் கருத்து | Gambhir Talked About Srilanka Team In World Cup

இலங்கை அணி

இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை குறித்து பேசியுள்ளார். அதில் இந்தமுறை இலங்கை அணிதான் மிகவும் பலமான அணியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர்  வரிசையாக இலங்கை அணி சிறப்பாக விளையாடி வருகிறது, அவர்கள் ஆசியக் கோப்பையை வெல்லுமென யாருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் இந்த உலகக்கோப்பையில் இலங்கை அபாயகரமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.