#IndvsPak..கோலி'க்கு சரியாக விளையாடவே தெரியவில்லை...கடுமையாக விமர்சித்த கவுதம் கம்பிர்

Rohit Sharma Virat Kohli
By Karthick Sep 03, 2023 06:31 AM GMT
Report

ஷாகின் ஷா அப்ரிடி பந்துவீச்சில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த நிலையில் அதனை வர்ணனையில் இருந்த முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் கடுமையாக விமர்சித்தார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி

ஆசிய கோப்பை போட்டியில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 gambhir-slams-kohli-batting-in-asia-cup-pakistan

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா 11, விராட் கோலி 4, ஸ்ரேயாஸ் ஐயர் 14 , சுப்மன் கில் 10 என சொற்ப ரன்களை எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தது வெளியேறினர். ஆனால் 5-தாவது விக்கெட்டிற்கு கை கோர்த்த இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டிய இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியில் சரிவில் இருந்து மீட்டனர்.  

gambhir-slams-kohli-batting-in-asia-cup-pakistan

அரைசதத்தை கடந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த கூட்டணி அணியின் ஸ்கோர் 204'ஆக உயர்ந்த போது பிரிந்தது. 81 பந்துகளில் 82 ரன்களை விளாசிய இஷான் கிஷன் அவுட்டாக பின்னர் ஹர்திக் பாண்டியவும் 90 பந்துகளில் 87 ரங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக முடிவில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

gambhir-slams-kohli-batting-in-asia-cup-pakistan

பாகிஸ்தான் அணியில் ஷாகின் ஷா அப்ரிடி 10 ஓவர்களில் 2 மைடன்களுடன் வெறும் 35 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினார். இந்த ஆட்டம் பின்னர் மழையில் கைவிடப்பட்டது ரசிகர்களை மிகவும் ஏமாற்றியது. 

கம்பிர் கடுமையான விமர்சனம் 

இந்த போட்டியில் துவக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து ஷாகின் ஷா அப்ரிடி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஒரே பந்துவீச்சாளர் பந்தில் இவர்கள் இருவரும் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும்.

gambhir-slams-kohli-batting-in-asia-cup-pakistan

இதன் காரணமாக இருவரும் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார். இந்நிலையில், விராட் கோலி அவுட்டான போது வர்ணனையில் இருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர், “கோலி அவுட்டானது தேவையற்ற ஷாட். என குறிப்பிட்டு, முன்னோக்கியும் வராமல், பின்னோக்கியும் செல்லாமல் மிகவும் கேஷுவலாக விராட் விளையாடினார் என குற்றம்சாட்டினார். 

gambhir-slams-kohli-batting-in-asia-cup-pakistan

மேலும், ஷாகின் ஷா அப்ரிடிக்கு எதிராக விளையாடும் போது இவ்வாறு தான் நடக்கும் என்றும் உங்களுக்கு முன்னோக்கி போவதா? இல்லை பின்னோக்கி வருவதா? என்று புரியாது என்று கூறியிருக்கிறார்