ரோஹித் சர்மா விளையாடலைனா கேப்டன் இவர்தான் - கம்பீர் அறிவிப்பு
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இதனால் இந்திய கிரிக்கெட் அணி மீதும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்தது.
டெஸ்ட் கேப்டன்
வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் WTC இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் பேசிய அவர், "ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது தற்போது வரை உறுதிபடுத்தப்படவில்லை. ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாவிட்டால் பும்ரா கேப்டனாக அணியை வழிநடத்துவார். தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் விளையாடுவார்.
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள் என் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? மிகவும் கடினமான, மதிப்புமிக்க வேலை என்று தெரிந்துதான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்" என பேசினார்