TRP'க்காக நானும் - விராட்டும் இல்லை!! சண்டை குறித்த கேள்வி..கடுப்பான கம்பீர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் மீது பல எதிர்பார்ப்புகள் உள்ளது.
கம்பீர் விராட்
ஐபிஎல் 2023-ஆம் ஆண்டின் மேஜர் ஹைலைட் என்றால் அது அப்போது லக்னோவில் இருந்த கம்பீர் மற்றும் பெங்களூருவின் விராட் கோலிக்கும் இடையே நடைபெற்ற மோதல் தான்.
மைதானத்திலேயே இருவருமே வார்த்தை மோதலில் ஈடுபட்டது பெரும் கவனத்தை பெற்றது. காரணம், இருவருமே இந்திய அணியின் ஜாம்பவான்கள் ஆவார்கள்.
தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்குள் உறவு எப்படி அமையும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
TRP..
இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த போது, கம்பீரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், விராட் கோலிக்கும் எனக்கும் இருக்கும் எங்கள் இருவருக்கும் இடையே உள்ளதே மட்டுமே என்று குறிப்பிட்டு அது TRP'க்கானது அல்ல என தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே போல அவர் பேசும் போது, விராட் கோலி - ரோகித் சர்மா தொடர்ந்து அணிக்காக விளையாடுவது அணிக்கே சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார் கம்பீர்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
