"இதுதான் கடைசி வாய்ப்பு” ... ரஹானாவை கடுமையாக விமர்சித்த கவுதம் கம்பீர் - என்ன சொன்னார் தெரியுமா?
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானேவை முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் துணை கேப்டன் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் இருந்தவர் அஜிங்க்யே ரஹானே கடந்த சில ஆண்டுகளாக சொதப்பி வருகிறார்.
இந்நிலையில் அவரின் பார்ம் குறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர் ‘டிராவிட் தலைமையில் ரஹானே தனது குறைகளைக் களைந்து பார்முக்கு திருமப்வேண்டும். புஜாரா மற்றும் ரஹானேவுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும். இல்லையென்றால் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பல வீரர்கள் காத்திருக்கின்றனர்.
ரஹானே அணியில் நீடிப்பதே அவர் கேப்டன் என்பதால்தான். அவருக்கு இது அதிர்ஷ்டம்தான். இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.