ஆடம்பரத்தின் உச்சம்..! வீடா..? அரண்மனையா..? விராட் கோலியின் புதிய மாளிகை..!
13 கோடி மதிப்பில் மிகவும் பிரமாண்டமான வீட்டினை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து கட்டியுள்ளனர்.
விராட் - அனுஷ்கா
உலக கிரிக்கெட்டில் நட்சத்திரமாக திகழும் விராட் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றார். இவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இருவரின் சொத்து மதிப்பும் சேர்த்து தற்போது சுமார் ரூ.1,300 கோடியாக உள்ளது என கூறப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு இந்த நட்சத்திர தம்பதிகள் இணைந்து 19 கோடி மதிப்புள்ள 8 ஏக்கர் நிலம் ஒன்றினை வாங்கினர். அதன் பின்னர் தற்போது மும்பை alibaug பகுதியில்,13 கோடி மதிப்பில் ஆடம்பர வீடு ஒன்றினை கட்டியிருக்கின்றனர் .
13 கோடியில்
ஆடம்பரத்திற்க்கு சிறிதும் பஞ்சமில்லாமல் கட்டப்பட்டுள்ள அலிபாக் வீடு விடுமுறை நாட்களை கழிப்பதற்காகவே கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டில், வெப்பநிலையை கட்டுப்படுத்தும் குளம், ஒரு பரந்த தோட்டம், ஒரு பெஸ்போக் சமையலறை(Bespoke) closed parking மற்றும் பணியாளர்களுக்கென தனி குடியிருப்புகள் போன்றவை உள்ளன.

இது மட்டுமில்லாமல் இவர்களுக்கு 34 கோடி மதிப்பில் 7171 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள சொகுசு வீடு உள்ளது. இதுதான் தற்போது இவர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சக்கட்ட பரபரப்பில் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் தவெக முன்னிலை IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan