மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான்; சோதனையில் தாமதம் - இஸ்ரோ அறிவிப்பு!
ககன்யான் முதற்கட்ட சோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ககன்யான்
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை இந்தியாவும் எட்ட கடந்த 2014-ல் இத்திட்டத்துக்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
முதற்கட்ட சோதனை
இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷாரில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று விமான சோதனை 8 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில்
தற்போது வானிலை காரணமாக 8.30மணிக்கு தொடங்கும் என அறிவித்தது.
இந்திய விமானப் படையில் (IAF) தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் தற்போது பல்வேறு இஸ்ரோ வசதிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.