மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான்; சோதனையில் தாமதம் - இஸ்ரோ அறிவிப்பு!

India ISRO
By Sumathi Oct 21, 2023 03:41 AM GMT
Report

ககன்யான் முதற்கட்ட சோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ககன்யான்

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை இந்தியாவும் எட்ட கடந்த 2014-ல் இத்திட்டத்துக்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

gaganyaan

பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் புதிய தகவல்

ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் புதிய தகவல்

முதற்கட்ட சோதனை

இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷாரில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று விமான சோதனை 8 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில்

ISRO

தற்போது வானிலை காரணமாக 8.30மணிக்கு தொடங்கும் என அறிவித்தது. இந்திய விமானப் படையில் (IAF) தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் தற்போது பல்வேறு இஸ்ரோ வசதிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.