10th படிக்கும்போதே அந்த விஷயம் நடந்துச்சு; ஸ்கூல்ல எல்லாரும் பார்த்து.. கேப்ரில்லா குமுறல்!
தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து நடிகை கேப்ரில்லா பேசியுள்ளார்.
நடிகை கேப்ரில்லா
ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. பின்னர் குழந்தை நட்சத்திரமாக சீரியல்களிலும், சினிமாவிலும் அறிமுகமானார். இவர் 3, சென்னையில் ஒருநாள், அப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதனையடுத்து ஈரமான ரோஜாவே சீசன் 2-வில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க கேப்ரில்லாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
மார்பிங் புகைப்படம்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கேப்ரில்லா "நான் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனது புகைப்படத்தை யாரோ தவறாக மார்பிங் செய்து வெளியிட்டார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பது நானே கிடையாது.
ஆனால், யாரவது புதிதாக பார்த்தால் அது நான் தான் என நினைப்பார்கள். அப்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். பள்ளியில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். இதனால் 3 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அதிலிருந்து வெளியே வருவதற்கே எனக்கு சில நாட்கள் ஆனது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.