ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கும் ஜி7 நாடுகள்

vaccine g7countrie poorcountrie
By Irumporai Jun 11, 2021 10:51 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது.

குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான ஜி7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக கூறியிருந்த நிலையில் பிரிட்டனும் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.