பாஜக எம்.பி. ஜி.வி.எல் நரசிம்மராவை ஓங்கி உதைவிட்ட பசு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
பாஜக தலைவர் ஜிவிஎல் நரசிம்மராவை பசு ஒன்று ஓங்கி உதைத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிவிஎல் நரசிம்மராவ் மீது செருப்பு வீச்சு
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.எல். நரசிம்மராவ். இவர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளாக உள்ளார். மேலும் ராஜ்யசபா எம்.பி.யும் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2019ம் ஆண்டு டெல்லியில் இவர் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, பத்திரிகையாளர்களுடன் அமர்ந்திருந்த ஒருவர் இவர் மீது செருப்பை வீசினார். இச்சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உதை விட்ட பசு
இந்நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூரில் ஜி.வி.எல்.நரசிம்மராவ் ஒரு பசுவை தொட்டு வணங்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக பசு நரசிம்மராவ்வை தன் காலால் எட்டி உதைத்தது. பசு தாக்குதலில் நரசிம்மராவ் ஒரு நொடிப்பொழுது உயிர் தப்பினார்.
பாஜக எம்.பி, ஜி.வி.எல் நரசிம்மராவ்வை பசு தாக்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
