ஜி ஸ்கொயர் ரெய்டு – ரூ.700 கோடி வரி ஏய்ப்பு : வெளியான முக்கிய தகவல்
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.3.5 கோடி பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி ஸ்கொயர்
வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து சென்னையை தலைமை இடமாக செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் கடந்த ஒருவாரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூர், பெல்லாரி உள்ளிட்ட சுமார் 70 இடங்களிலும் தொடர் சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.
ரூ.700 கோடி வரி ஏய்ப்பு
கடந்த 24-ம் தேதி தொடங்கிய சோதனை நேற்று நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கணக்கில் வராத 3.5 கோடி ரூபாய் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், திமுக எம்எல்ஏ வீட்டிலும் சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது