எங்கள் நிறுவனம் திமுகவுக்கு சொந்தமானது அல்ல : விளக்கம் கொடுத்த G Square
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகள் தவறானது என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வருமான வரித்துறை சோதனை
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர், சென்னையில் ஆழ்வார் பேட்டை ம் நுங்கம்பாக்கம், போன்ற இடங்களில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
திமுகவினர் வீட்டில் சோதனை
மேலும் , சென்னை அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்எல்ஏ மோகனின் மகன் G Square நிறுவன நிர்வாகியாக உள்ளதால் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல் கர்நாடகாவில் பெங்களூரு,மைசூர் ஆகிய நகரங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விளக்கம்
இந்த நிலையில், G Square நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ, அவர்கள் கட்டுபாட்டிலோ இல்லை, எங்கள் நிறுவனம் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த குற்றசாட்டுகள் தவறானவை என G Square நிறுவனம் விளக்கமளித்துள்ளது.