விலையுயர்ந்த காரில் ஏறிய ஜி.பி.முத்து கதறி அலறல்.... நடந்தது என்ன? ஷாக்கான ரசிகர்கள்

GP Muthu Funny viral video
By Nandhini Nov 02, 2022 12:03 PM GMT
Report

விலையுயர்ந்த காரில் ஏறிய ஜி.மு.முத்துவை அவரது நண்பர்கள் சேர்ந்து கதறி விட்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி.முத்து

யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜி.பி.முத்து, தனக்கு பணம், புகழை விட தன் மகன்தான் முக்கியம் என்றும், அவன் என்னை ஒவ்வொரு நிமிடமும் தேடுவான். அதனால நான் போயே ஆகணும் என உறுதியாக கூறினார். இதனையடுத்து, அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

g-p-muthu-car-viral-video

காரில் கதறிய ஜி.பி.முத்து

தற்போது சமூகவலைத்தளங்களில் youtube வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நண்பரின் விலை உயர்ந்த காரில் அமர்ந்த ஜிபி முத்துவை, நண்பர்கள் சேர்ந்து கதற வைத்திருக்கிறார்கள்.

இந்த காட்சியினை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். ஜிபி முத்துவை கார் கிளச்சில் கால் வைக்க சொல்லி விட்டு, பின்பு அதிலிருந்து கால் எடுத்தால் அவ்வளவு தான் வண்டி ஓட ஆரம்பித்துவிடும் என்று நண்பர் கூறியதால், பயந்து போன ஜிபி முத்து கதறியுள்ளார். இதைப் பார்த்ததும் அவரது நண்பர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். பின்பு, ஒரு வழியாக அவரை அலறவிட்டு சமாதானப்படுத்தினர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் முதலில் ஜி.மு.முத்து கதறியதைப் பார்த்து பயந்து போனார்கள். இதன் பின்பு புரிந்து கொண்ட ரசிகர்கள்... வா தலைவா.. வா.. என்று வாழ்த்து சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.