மயான ஊழியர்களும் முன்கள பணியாளர்களே! - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

covid19 staff funreal
By Irumporai May 16, 2021 05:58 AM GMT
Report

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் பலர் மருத்துவமனைகளை நாடும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் முன்னதாக மருத்துவர், செவிலியர், துப்புரவு தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்திருந்த தமிழக அரசு தற்போது மயானங்களில் பணியாற்றுவோர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் மயான ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் மயான ஊழியர்களும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி மயானங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பலன் தரும் செய்தியாக இருக்கும் என கருதப்படுகிறது.