இறந்த மகனின் உடைக்கு பதிலாக மூளையை கொடுத்த பெண் - உறைந்த பெற்றோர்
தந்தையிடம் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் மூளை
கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்சாண்டர் பினோன் என்ற இளைஞர் காலமாகியுள்ளார். அவரது பெற்றோர்கள் சான் ஜோசில் உள்ள தேவாலயம் ஒன்றில் அலெக்சாண்டரின் இறுதி சடங்கை நடத்தியுள்ளனர்.

மேலும் இறுதி சடங்கு நடத்தும் குழுவிடம் தன் மகன் இறந்தபோது போட்டிருந்த உடைகளை மாற்றிவிட்டு புதிய உடைகளை போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த உடையை தங்களிடம் தரும்படியும் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, இறுதி சடங்கை வழிநடத்திய அனிதா சிங் என்பவர் அலெக்சாண்டர் தந்தையிடம் துணி இருக்கும் ஒரு பையை கொடுத்துள்ளார். அலெக்சாண்டர் தந்தை அந்த பையை வீட்டிற்கு எடுத்து சென்று துணிகளுடன் துவைக்க போட்டுள்ளார்.
பெற்றோர் ஷாக்
அப்போது அந்த பையில் இருந்து மூளை ஒன்று வெளிவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், தொடர்ந்து, அந்த மூளையை அந்த பையில் போட்டு அனிதா சிங்கிடம் கொடுத்தார். பையை பெற்றுக் கொண்ட அனிதா சிங்,

மன்னிப்பு கேட்கவோ அது யாருடைய மூளை என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை . மேலும், அனிதா சிங், அலெக்சாண்டரின் மூளையை ஒரு பாக்ஸில் போட்டு இறுதி சடங்கு இல்லத்தின் வாசலில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இரண்டரை மாதங்களுக்கு பிறகு அந்த மூளை அழுகி துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து, சில வாரங்களுக்கு பிறகு இறுதி சடங்கு இல்லத்தில் இருந்து
அலெக்சாண்டர் தந்தையை அழைத்து அது அலெக்சாண்டரின் மூளை தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.