தமிழ்நாடு பட்ஜெட்; இலங்கை தமிழர்களுக்கு 3959 வீடுகள் கட்ட ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு
2023 - 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் இதோ
தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
சங்கமம் கலைவிழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.
வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000 கோடி அளவிற்கு குறைத்துள்ளோம்.
சென்னை பெருவெள்ளம், கொரோனா உள்ளிட்டவற்றை சந்தித்த போது நிதி நெருக்கடி அதிகம் ஏற்பட்டது.
2006 - 2011ல் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதகமாக இருந்த மாநில வரி வருவாய் 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 5.5% ஆக இருந்தது.
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
வயது முதிர்ந்த மேலும் 590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை.
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
25 இடங்களில் நாட்டுப்புற, கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.