கொரோனா ஊரடங்கு - மக்களிடம் கெஞ்சிக் கேட்டு வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கை கடைபிடிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து #COVID19 பரவல் சங்கிலியை உடைப்போம். pic.twitter.com/kfvsoCpZph
— M.K.Stalin (@mkstalin) May 24, 2021