தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..! இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்..!
fulllockdown
tngovt
1week
covidincrease
By Anupriyamkumaresan
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறதால், புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளாக காய்கறி, மளிகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஒருவாரத்திற்கு முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பார்சல் உணவு சேவை தவிர்த்த எந்த சேவையும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.