தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு - ராமேஸ்வரத்தில் வெறிச்சோடிய சாலைகள்
ராமேஸ்வரத்தில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.
இதை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கையும் அமல்படுத்தி தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இன்றி நகர்முழுவதும் வெறிச்சோடி காணப்படுகின்றது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பொது மக்கள் ஆதரவோடு ராமேஸ்வரத்தில் ஊரடங்கு முழு அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அரசு அறிவித்தபடி மக்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிவது, கைகளை சுத்தம்செய்வது, சமூகஇடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என நகராட்சி சார்பில் நகர் முழுவதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.