எங்களோட அடுத்த எய்ம் தைவான் : ஜி ஜின்பிங் எச்சரிக்கை
சீன ராணுவம் அதிபரை சிறைபிடித்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் இன்று சீன அதிபர் பதவியை மீண்டும் தொடர உள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு
சீனாவில் பல ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில் இன்று சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடைபெறுகின்றது .
இந்த நிலையில் கடந்த 2 முறை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்கே 3 வது முறையாக அதிபராக சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
தைவான் இலக்கு
சீனாவில் ஒருவர் 2 முறைதான் அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற சட்டம் இருந்து வந்தது. எந்த தலைவரும் சீனாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பதவி வகித்தது இல்லை.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் பேசிய அவர், ஹாங்காங்கின் முழு அதிகாரத்தையும் சீனா கைப்பற்றிவிட்டது. விரைவில் தைவானையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்றார்.
தைவான் பிரச்சனையை சீன மக்கள் சரி செய்வோம். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலக நாடுகளின் முயற்சியில் சீனாவும் அங்கம் வகிக்கும் என கூறினார்.