பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 60 பேர் பரிதாப பலி.. சோகத்தில் மக்கள்

Haiti fueltankblast
By Petchi Avudaiappan Dec 14, 2021 07:40 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஹைதியில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் 60 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹைதியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை சந்தித்தது.

அந்த விபத்து காரணமாக லாரியில் இருந்த வெளியேறிய பெட்ரோலை கண்ட அருகில் இருந்த பகுதி மக்கள் பாத்திரங்களில் அதை அள்ளிச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயினால் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. அதில் 60 பேர் தியில் கருகி உயிரிழந்துள்ளனர். விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன.

நூற்றுக்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.  இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி, இதனை தேசிய பேரழிவு என்றும், நாடு தழுவிய அளவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.