இலங்கையில் தீவிரமடையும் போராட்டம் : தீயில் கருகி பொது சொத்துக்கள் சேதமடைவதால் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்!

Fuel Price In Sri Lanka Sri Lankan protests Sri Lanka
2 மாதங்கள் முன்

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச நேற்று முந்தினம் ராஜினாமா செய்தார்.

இலங்கையில் தீவிரமடையும் போராட்டம் : தீயில் கருகி பொது சொத்துக்கள் சேதமடைவதால் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்! | Fuel Selling Stopped In Srilanka Amid Protest

அதேசமயம் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது.

இந்தநிலையில் பிரதமர் மாளிகையான அலரியிலிருந்து ராஜபக்ச நேற்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். அதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர்கள் ஜெட் படகில் சோபர் தீவிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இலங்கை முழுக்க கலவர பூமி ஆனது. 

இலங்கையில் போராட்டகாரர்கள் அரசு அலுலகங்கள், வீடுகள் தீவைக்கப்பட்டு வந்த நிலையில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துகளைத் தாக்கி அழித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் தீவிரமடையும் போராட்டம் : தீயில் கருகி பொது சொத்துக்கள் சேதமடைவதால் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்! | Fuel Selling Stopped In Srilanka Amid Protest

இந்நிலையில் அங்கு அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல இடங்களில் பொது சொத்துக்களை எரிக்க பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படலாம் என்பதால் எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.