நிலக்கரி சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - 14 பேர் உயிரிழப்பு
fire
russia
fuel
By Anupriyamkumaresan
ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சைபீரியா பகுதியில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 300 பேர் வேலை செய்து வந்தனர்.
திடீரென சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 11 பணியாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களை மீட்க சென்ற மீட்புப்படையினர் மூவரும் உயிரிழந்தனர்.

6 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே இருந்த நிலையில், காணாமல் போன 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.