வாட்ஸ்அப்பின் தேவையில்லாத வேலையால் டிரெண்ட் ஆகும் சிக்னல் மற்றும் டெலிகிராம்

fsocialmedia-whatsup-facebook-instagram-telegarm
By Jon Jan 11, 2021 01:31 PM GMT
Report

வாட்ஸ்அப்பின் தேவையில்லாத செயலால் சிக்னல் மற்றும் டெலெக்ராம் செயலிகளுக்கு அடித்த ஜாக்பாட். வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.

மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுரை அளிக்கப்படுகிறது.