சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - இதோ முழு லிஸ்ட்
நமது வாழ்க்கை நவீன உலகில் வெகுவாக மாறி விட்டது. உடல் உழைப்புஇல்லாமல் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
உடல் பருமன் சர்க்கரை நோய்க்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது. சர்க்கரை நோய் என்பது பரம்பரையாகவும் ஏற்படக்கூடியது.
அதே போல உணவு பழக்கம் என்பதும் ஆரோக்கியமான உணவுகளை விடுத்தது சுவையான உணவுகளை நோக்கிய உணவு முறையாக மாறி விட்டது.
தவறான உணவு முறையும் சர்க்கரை நோய் வருவதற்கான ஒரு காரணமாக அமைகின்றது. சரியான தூக்கம் இன்மை மற்றும் அதிக மனஅழுத்தம் போன்ற காரணிகளும் சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகின்றன.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் பழங்களில் ஒன்றாகும்.
ஆரஞ்சு
எந்த நோயாளிகளும் எந்தவித பயமும் இல்லாமல் சாப்பிடக்கூடிய பழம்தான் இந்த ஆரஞ்சு.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது.
நாவல் பழம்
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் என பலசத்துக்கள் நிறைந்துள்ளது.
தினமும் மூன்று நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்க முடியும்.
கொய்யாப்பழம்
அதிக சத்துக்கள் நிறைந்த பலன்களில் முதன்மையானது கொய்யாப்பழம். சர்க்கரை நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் சிறந்த பழமாகும்.
தோல்வியாதி மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தவிர்ப்பது சிறந்தது.
திராட்சை பழம்
திராட்சை பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் சர்க்கரையின் அளவு மிக குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி சிறந்த பழம். உணவு சமிபாட்டுக்கும் பப்பாளி சிறந்த பழம்.
மாதுளம் பழம்
மாதுளை இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தத்தில் ஆக்ஸிஜின் அளவுகளை அதிகரிப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வரவழைக்க உதவுகிறது.
ஆப்பிள்
ஆப்பிள் கொலஸ்ட்ரோல், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த பழம். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.
தர்ப்பூசணி
தர்ப்பூசணியில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாகவும் சுறு சுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
இது இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளை ஊக்குவிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் நன்மை அளிக்க வல்லது.