இதுக்குமா..இனி பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டியாம் - ஆடிபோன மக்கள்!

India
By Sumathi Oct 16, 2022 07:58 AM GMT
Report

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி விதித்திருப்பது சரியானதுதான் என ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி

சப்பாத்தி, ரொட்டி ஆகிய உணவுகளுக்கு 5 சதவீதம் மட்டும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம், கேரளம் ஆகிய பகுதிகளில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றான பரோட்டாவுக்கு 18% வரி விதிக்கப்பட்டது.

இதுக்குமா..இனி பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டியாம் - ஆடிபோன மக்கள்! | Frozen Parotta 18 Percent Gst Tax

இந்த வரி விதிப்பை எதிர்த்து 'வாடிலால் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பரோட்டா தயாரிக்கும் நிறுவனம் குஜராத் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இது தொடர்பாக அந்த ஆணையம் தெரிவித்துள்ள விளக்கத்தில், 'பேக் செய்யப்பட்ட உறைந்த பரோட்டாவவை ஒப்பிடுகையில் சப்பாத்தி, ரொட்டி போன்றவை வேறானவை.

 பரோட்டா

சப்பாத்தி பரோட்டா ஆகியவை தயாரிப்பதற்கு கோதுமை மாவு பொதுவான பொருளாக இருந்தாலும் பரோட்டாவில் வேறு சில பொருட்களும் சேர்க்கப்படுகிறது. பரோட்டாக்கள் மலபார், மிக்ஸ்டு வெஜிடபிள், ஆனியன், மேத்தி, ஆலு, லச்சா என பல விதங்களில் தயாரிக்கப்படுகிறது.

மேலும் அவற்றில் எண்ணெய், உப்பு, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கொத்தமல்லி என பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே சப்பாத்தி, ரொட்டியை விட பரோட்டா என்பது வேறுபட்ட ஒன்றாக இருப்பதால் ஐந்து சதவீத வரி வரம்புக்குள் இருக்கும் சப்பாத்தி, ரொட்டி லிஸ்டில் பரோட்டாவை சேர்ப்பது என்பது தகுதியற்றது' என விளக்கம் அளித்துள்ளது.

மேலும், பேக் செய்யப்பட்ட அல்லது உறைந்த பரோட்டாகள் பொன்னிறமாக மாறும் வரை 3-4 நிமிடங்களுக்கு சமைக்கப்பட வேண்டும் என்பது எடுத்துக்காட்டப்பட்டது. நிறுவனம் தயாரிக்கும் வெவ்வேறு பரோட்டாகளில் கோதுமை மாவின் கலவை 36 சதவீதத்திலிருந்து 62 சதவீதம் வரை மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.