மனைவியுடன் பேசியதை கண்டித்த கணவருக்கு கத்திக்குத்து - நண்பர் வெறிச்செயல்..!
மனைவிடன் பேசியதை கண்டித்த கணவரை அவரது நண்பர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் குணா (எ) தனசேகரன், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.அவரது நண்பர் வெள்ளலூரை சேர்ந்த சந்தோஷ். இவர்கள் இருவரும், குணா வீட்டில் மது அருந்துவது வழக்கம்.
இதனிடைய, சந்தோஷுக்கும், குணா மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த குணா, தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சந்தோஷ் மற்றும் குணாவின் மனைவியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த குணா, சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும், வாக்குவாதம் முற்றி, இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, சந்தோஷ், குணாவை கத்தியால் குத்தி தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து, குணா ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.