டிரெண்டாகும் திருமணம்; வேறு யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு - புது கலாச்சாரம்!
இளைஞர்களிடையே நட்பு திருமணம் என்ற நடைமுறை அதிகரித்து வருகிறது.
நட்பு திருமணம்
ஜப்பான் இளைஞர்களிடையே திருமணத்தில் நாட்டம் குறைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு குழந்தை பெறுவதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நட்பு திருமணம் என்ற புதிய டிரெண்ட் வேகமெடுத்து வருகிறது. இதன்படி, ஒரு ஆணும் பெண்ணும், திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தாலும், அவர்களிடையே எந்தவிதமான உடலுறவு மற்றும் பரஸ்பர அன்பு எதுவும் இருக்காது.
பரவும் கலாச்சாரம்
வேறு சிலருடன் தங்களது உடலியல் மற்றும் மனது சார்ந்த அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையாளர்களே இந்த வகை திருமணத்தை நாடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளை பெற்று வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள், செயற்கையான முறைகளில் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டில் சுமார் 500 பேர்தான் இந்த நட்பு திருமண வட்டத்தில் இருந்ததாகவும், தற்போது 12 கோடி இளைஞர்கள் இந்த வகையில் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் அங்குள்ள நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.