பலியான கால்பந்து வீரர்; நண்பர்களின் நெகிழ்ச்சி செயல் - மீண்டும் மகனை கண்டு கதறி அழுத தாய்!

Tamil nadu Nilgiris
By Jiyath Jan 25, 2024 07:14 AM GMT
Report

பலியான கால்பந்து வீரரின் நினைவு போட்டியில், அவரின் நண்பர்கள் செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கால்பந்து வீரர் 

நீலகிரி மாவட்டம் குன்னூர் எல்லநள்ளி அட்டுகொலை கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக். கால்பந்து வீரரான இவர் கடந்த ஆண்டு இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார்.

பலியான கால்பந்து வீரர்; நண்பர்களின் நெகிழ்ச்சி செயல் - மீண்டும் மகனை கண்டு கதறி அழுத தாய்! | Friends Idolized The Son And Gave It To Mother

இந்நிலையில் இவரின் நினைவாக, அட்டு கொலை கிராமத்தில் ஏ.டி.கே கால்பந்து குழு சார்பில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா, சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டனர்.

நினைவுப் பரிசு

பின்னர் அவர்களுக்கு மக்கள் முன்னிலையில் நினைவு பரிசை வழங்கினர். அதனை பிரித்துப் பார்த்தபோது மகன் ரித்திக்கின் சிலை இருந்தது.

பலியான கால்பந்து வீரர்; நண்பர்களின் நெகிழ்ச்சி செயல் - மீண்டும் மகனை கண்டு கதறி அழுத தாய்! | Friends Idolized The Son And Gave It To Mother

இதனை கண்டவுடன் மனம் கலங்கிய தாயார் கதறி அழுதார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. இந்த நிகழ்வு நட்பின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது.