பிரண்ட்ஸ் தொடர் புகழ் நட்சத்திரம் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Cinema Lead
By Karthick Oct 29, 2023 05:37 AM GMT
Report

பிரபல ஆங்கில sitcom தொடரான பிரண்ட்ஸ் தொடரில் நடித்த நடிகர் மரணமடைந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிரண்ட்ஸ் தொடர்

ஆங்கில மொழியை தாண்டி உலகின் பல மொழிகள் பேசும் மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற ஆங்கில தொடராக இருந்து வருவது பிரண்ட்ஸ் தொடர். கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இத்தொடர் அப்போதே மேற்கு நாட்டு ரசிகர்களிடம் பெரும் பெற்ற தொடராக இருந்து பின்னர், OTT தளங்களின் வருகையின் மூலம் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது.

friends-fame-mathew-perry-died

20 முதல் 30 வயதுடைய மூன்று பெண்கள், மூன்று ஆண்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட இத்தொடருக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஹானிஸ்டன்'னுக்கு இந்த தொடர் தான் பெரும் புகழை முதலில் கொடுத்தது.

மேத்யூ பெர்ரி

இத்தொடரில், சேண்ட்லர் பிங் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் மேத்யூ பெர்ரி. 54 வயதாகும் இவர் நேற்று மாலை மரணமடைந்துள்ளார். ஜக்குஸி என்ற நீச்சல் குளத்தில் அவரின் உடல் சடலாமாக கிடந்து உள்ளது.

friends-fame-mathew-perry-died

இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதிகாலை மேத்யூ தனது வீட்டிற்கு வந்தவுடன் வீட்டு பணியாளருக்கு மற்றொரு வேலை கொடுத்து வெளியில் அனுப்பியுள்ளார்.

பணியாளர் 2 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது நீச்சல் குளத்தில் மேத்யூ சடலமாக கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிகளவில் மது அருந்திவிட்டு நீச்சல் குளத்தில் இறங்கியதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேத்யூ பெர்ரி'யின் மறைவிற்கு பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.