குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை: இருவர் கைது

Murder Tamil Nadu Porur
By mohanelango May 05, 2021 07:12 AM GMT
Report

சென்னை: போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட், பெயிண்டர் வேலை வேலை செய்து வந்தார். இவரது மகன் தமிழரசன்= என்பவருடன் அங்கிருந்த ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இன்று மாலை வீட்டின் அருகே அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், பழனிச்சாமி, ஆகியோருடன் சேர்ந்து மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது மூன்று பேருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் டேவிட் வீட்டில் இருந்த மூங்கில் கொம்பை எடுத்து வந்து இருவரையும் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து டேவிட் தலையில் பலமாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் டேவிட் மயங்கினார்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை: இருவர் கைது | Friends Drunk Fight Results In Murder Porur

இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் டேவிட் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்யப்பட்டு கிடந்த டேவிட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழனிசாமி மற்றும் லட்சுமணன் ஆகிய 2 பேரை போரூர் போலீசார் கைது செய்து கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.