‘உன்னை மறக்க முடியாது..’ நண்பன் இறந்த துக்கத்தில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம்
தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர், கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 1ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இவர் 11ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நண்பன் உதயகுமார் (17). கடந்த மாதம் 5ம் தேதி உயதகுமார் உயிரிழந்துவிட்டார்.
இதனால், அன்றையிலிருந்து நண்பன் இறந்த துக்கத்தில் மில்டன் இருந்து வந்துள்ளார். நண்பனின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மில்டனை சமாதானம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தினமும் நண்பனையே நினைத்து விரக்தியியில் இருந்து வந்துள்ளார் மில்டன். தனது நண்பன் இறந்து போன 5ம் திகதி அன்றே தானும் இறக்க முடிவு செய்து புதன்கிழமை அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மில்டன்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனே மில்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவவமனைக்கு கொண்டு சென்று சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.