பிரைட் ரைஸ் சாப்பிட்டவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
பிரைட் ரைஸ் சாப்பிட்ட மெக்கானிக் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு ஸ்ரீனிவாசா அவென்யூ விரிவாக்கம் வீதியை சேர்ந்தவர் தேசிங்கு மகன் சங்கர். அப்பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தற்போது சுகன்யா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சங்கர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு இரவு வழக்கம்போல் வீடு திரும்பியுள்ளார். அப்போது, பாஸ்ட் புட் கடையில் பிரைட் ரைஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், மனைவி குழந்தையுடன் வீட்டில் அவர் படுத்திருந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு திடீரென புரை ஏறி இருமல் ஏற்பட்டுள்ளது. உடனே மனைவியிடம் குடிக்க சங்கர் தண்ணீர் எடுத்து வருமாறு கூறிய நிலையில், அதற்குள் நெஞ்சுவலி அதிகமாகவே சுருண்டு விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே சங்கர் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரைட் ரைஸ் சாப்பிட்டதால் உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தாரா?
அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பி ரேத பரிசோதனைக்கு பிறகே சங்கரின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.