எலி கடித்த பழங்களில் ஜூஸ் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை!
சென்னையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீரென ஒரு ஜூஸ் கடையில் சோதனை நடத்தியதில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சோதனை
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் அழுகிப் போன துர்நாற்றம் வீசியுள்ளது.
அதனால் கடை முழுவதும் சோதனை செய்ததில், அந்த கடைகாரர்கள் கோயம்பேடு சந்தையில் இருந்து எலிகள் கடித்த மற்றும் அழுகிப் போன பழங்களை வாங்கி வந்து ஜூஸ் போட்டு தருகின்றனர்.
இதனை குறைந்த விலையில், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், அந்த கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில், அந்த கடை உரிய அனுமதி இன்றி ஆவணம் ஏதும் இல்லாமல் நடத்தப்பட்டு வருவது தெரியவந்தது.
மேலும், அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் "இத போய் மனசார குடிக்குறீங்களே" என்று வருத்தத்துடன் கூறினார்
. பின்னர், அந்த பிரஷ் ஜூஸ் கடைக்கு சீல் வைத்து மூடினர்.