ஆண்களே கவனம்...அடிக்கடி சேவிங் செய்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுமா? ஆய்வில் ஷாக் தகவல்!
அடிக்கடி தாடி சேவிங் செய்வது ஆண்களுக்கு மலட்டுத் தன்மை என தகவல் பரவி வருகிறது.
அடிக்கடி சேவிங்
இந்த காலகட்டத்தில் மலட்டுத்தன்மை படிப்படியாக அதிகரித்து வருவதாக சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன குறிப்பாக ஆண்களுக்கு. பொதுவாக ஆண்களின் பாலியல் சக்தி குறைய ஒழுங்கற்ற உணவு, அதிகப்படியான மன அல்லது உடல் அழுத்தம் என பலவித காரணங்கள் உள்ளது.
அந்த வகையில் அண்மையில் ஒரு விசித்திரமான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தகவல்படி,அடிக்கடி தாடியை ஷேவ் செய்யும் பழக்கம் ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் என்று கண்டறிப்பட்டுள்ளது.
அதாவது வீட்டிலோ அல்லது சலூனிலோ தாடி மீசையை சேவிங் செய்யும்போது வாசனை திரவியம், ஷேவிங் கிரீம் மற்றும் ஜெல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதுண்டு.இது தான் ஆண்களின் மலட்டுத்தன்மையுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
மலட்டுத்தன்மை
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான ஷேவிங் கிரீம்கள் அதிகப்படியான ரசாயனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கின்றன.இந்த கிரீம்களை பயன்படுத்துவதால், விந்தணுக்களின் உற்பத்தி திறன் குறைவதோடு, சருமப் பாதிப்பும் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
பல ஷேவிங் கிரீம்களில் ’ஃப்தாலேட்’ எனப்படும் ஒரு வகை வேதிப்பொருள் உள்ளது. இது பிளாஸ்டிக் பொருட்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உபயோகிக்கப்படும். இந்த இரசாயனம் விந்தணு புரதங்களை உடைக்கிறது. இதன் விளைவாக, ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், ஒரு விந்தணு முதிர்ச்சியடைய 72 நாட்கள் ஆகும். ஃப்தாலேட் நிரம்பிய கிரீமின் தாக்கத்தால் அது தடைப்படுகிறது. இதனால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து,செயல்திறனை இழக்கக்கூடும். எனவே தான் ஆண்களுக்கு மலட்டுத்தன்மைப் பிரச்னைகள் ஏற்படுகின்றது என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.