பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு தக்காளி வீச்சு : வைரலாகும் வீடியோ

By Irumporai Apr 28, 2022 11:54 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலமாக பிரான்சின் மூன்றாவது ஜனாதிபதி என்ற பெருமையினை இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் நடக்க உல்ள நாடாளுமன்ற தேர்தலில் இம்மானுவேல் பெரும்பான்மையை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது,.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னதாக இன்று முதல்முறையாக வெளியில் சென்ற மைக்ரோனுக்கு மக்கள் தக்காளிகளை தூக்கி இருந்துள்ளனர். அப்பொழுது மக்ரோனின் பாதுகாப்பு காவலர்கள் அவரை சூழ்ந்துகொண்டுள்ளனர்