பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறிய ஃபிரான்ஸ் கால்பந்துவீரர்.. வைரலாகும் வீடியோ!

football french bottle
1 வருடம் முன்

ரொனால்டோவைத் தொடர்ந்து பிரான்ஸ் நட்சத்திர கால்பந்து வீரர் பீர் பாட்டிலை அகற்றுமாறு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பின்போது தன்முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றிவிட்டு, தண்ணீர் குடிக்குமாறு, போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கூறியிருந்தார்.

இதேபோன்று பிரான்ஸ் நட்சத்திர வீரரான பால் போக்பா, தன்முன்வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலை அகற்றுமாறு தெரிவித்தார்.

இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் பால், மதுவுக்கு எதிரானவர் என்பதால், யூரோ கோப்பை ஸ்பான்ஸர் நிறுவனமான ஹெனிக்கன் நிறுவனத்தின் பீர் பாட்டிலை அகற்றுமாறு கூறினார் இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.