மீண்டும் 2 ரயில்கள் மோதி விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்

Accident Odisha Train Accident
By Thahir Jun 25, 2023 04:35 AM GMT
Report

மேற்கு வங்கத்தில் இன்று காலை 2 சரக்கு ரயில்கள் மோதியதில் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.

நாட்டை உலுக்கிய ரயில் விபத்து 

கடந்த ஜுன் 2 அன்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பயணிகள் ரயில்களில் பயணித்த 294 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாட்டையை உலுக்கிய இந்த ரயில் விபத்தின் சுவடுகள் நீங்காத நிலையில் அடுத்த சில வாரங்களில் இன்னொரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மீண்டும் ரயில் விபத்து 

மேற்கு வங்கம் மாநிலத்தின் பாங்குரா பகுதியில், இன்று(ஜூன் 25) அதிகாலை 2 சரக்கு ரயில்கள் மோதலில் 12 பெட்டிகள் தடம்புரண்டன.

Freight trains collide in Odisha

சரக்கு ரயில்கள் என்பதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. சரக்கு ரயில்களின் ஓட்டுநர் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரக்பூர் - பாங்குரா - ஆத்ரா வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும்,

அடுத்த 8 மணி நேரத்தில் அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து மீளும் என்றும் தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.