இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று 6-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இன்றை தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று காலை மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலமாக வேளாண்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழருக்கான அகதிகள் முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய முதல்வர் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம் தொடரும் என அறிவித்தார்.