சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா மத்திய பட்ஜெட் தாக்கல்!

ministry world finance
By Jon Feb 08, 2021 01:57 PM GMT
Report

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021 - 22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதனையடுத்து, அவர் இன்று தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது. வழக்கமாக பட்ஜெட் தாக்கல் பெட்டியினுள் வைத்து பட்ஜெட் தாள் கொண்டு வரப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த முறை சிவப்பு நிறத் துணி கோப்பில் நிதியமைச்சர் பட்ஜெட் தாள்களை எடுத்து வந்தார்.

அதேபோல இந்த முறையும் வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக காகிதமில்லா முறையில் டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யும் அனைத்து தகவலையும் தெரிந்துகொள்ள பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.  


Gallery