சுதந்திர இந்தியாவின் 2 வது பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் - 3வது பட்ஜெட் தாக்கல்
சுதந்திர இந்தியாவின் 2வது பெண் நிதியமைச்சராக நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 3வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
கொரோனாவால் கடும் பாதிப்பிற்கு உள்ளான இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்திலான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார். இது குறித்து அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கு முன்பும், பின்பும் இப்படி ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை என்னும் அளவிற்கு இந்த பட்ஜெட் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு மத்திய நிதியமைச்சராக பொறுபேற்ற 2வது பெண் அமைச்சர் என்ற பெருமையை தற்போது நிர்மலா சீதாராமன் பெற்றிருக்கிறார். அத்துடன் நாட்டின் முதல் முழு நேர நிதியமைச்சர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.
இந்திரா காந்தி, பாதுகாப்புத்துறையுடன், கூடுதல் பொறுப்பாகவே நிதித்துறையை கவனித்து வந்தார்.

61வது வயதாகும் நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, 2019 ல் இலாகா மாற்றம் செய்யப்பட்ட போது நிதியமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 15 ஆண்டு கால தனது அரசியல் வாழ்க்கையில், 2010களில் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த போது பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.