மாற்றுத்திறனாளியுடன் செல்வோருக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் - தமிழ்நாடு அரசு

Tn government
By Petchi Avudaiappan Jun 09, 2021 04:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மாற்றுத்திறனாளியுடன் செல்வோரும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நகர அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக தங்களுக்கும் இந்த கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதற்கான அரசாணையை தமிழக அரசினுடைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரபூர்வ இன்று வெளியிட்டுள்ளது.

இதில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மாற்று திறன் உடையவர்கள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் எனவும், அவர்களுடன் ஒரு உதவியாளரும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.