டிக்கெட் ஓசின்னு விளையாட்டாதான் பேசினேன் - அமைச்சர் பொன்முடி
கட்டணமில்லா பயணம் குறித்து தான் விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்தத் தேவை இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி
கட்டணமில்லா பயண திட்டம் குறித்து, இப்போது ஓசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் அமைச்சரின் பேச்சை வன்மையாக கண்டித்தனர்.
கலோக்கியலா பேசினேன்
அமைச்சர் இந்த ஆணவ பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். அதில், மகளிர் பேருந்து பயணம் குறித்து விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை,
எதார்த்தமாக கலோக்கியலாக பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால் தனது பேச்சிக்கு எந்தவித வருத்தமும் தெரிவிக்காத அவர், தனது பேச்சை பெரிது படுத்த வேண்டாம் என வெறுமனே கூறியிருப்பது மீண்டும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.