ரூ.750க்கு நாடு முழுவதும் பயணம் செய்யலாம்... மக்களை கவர அரசு அதிரடி அறிவிப்பு

By Petchi Avudaiappan May 23, 2022 07:43 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

மக்களை கவரும் வகையில் ரூ.750க்கு நாடு முழுவதும் பயணம் செய்யலாம் என ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. 

ஜெர்மனி நாட்டில் கடந்த சில நாட்களாக  எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அந்நாட்டு அரசு வித்தியாசமான முடிவை கையில் எடுத்துள்ளது.

எரிபொருள் கட்டண உயர்வை சமாளிக்கும் வகையில் மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.  அந்த வகையில்  நிலையான பொதுப்போக்குவரத்து கட்டணமாக மாதத்திற்கு இந்திய மதிப்பில் 750 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு மாதத்திற்கான  இந்த கட்டணத்தை செலுத்திவிட்டால் நாடு முழுவதும் பேருந்து, ரயில்களில் இலவசமாக பயணிக்க முடியும். ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.